மேட்டூர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
By : King 24x7 Website
Update: 2023-12-31 17:15 GMT
சேலம் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக மேட்டூர் அணை பூங்கா விளங்குகிறது. நீர்வளத்துறை சார்பில் பூங்கா நுழைவு கட்டணமாக ரூ.5 வசூல் செய்யப்படுகிறது . இந்நிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு உள்ளிட்ட தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை முன்னிட்டு உள்ளூர் மட்டுமின்றி சேலம், ஈரோடு, தர்மபுரி,நாமக்கல், உள்ளிட்ட வெளிமாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் மேட்டூர் பூங்காவிற்கு வந்தனர். இவர்கள் காவிரி ஆற்றில் குளித்து விட்டு அணை கட்டு முனியப்பன் கோவில் சாமி தரிசனம் செய்தனர். சிறுவர் சிறுமிகள் பூங்காவில் உள்ள தூரி ,சர்கல் விளையாண்டு மகிழ்ந்தனர் பூங்காவில் உள்ள மீன் பண்ணை மான் முயல் பாம்பு ஆகிய பண்ணைகளை சிறுவர் சிறு சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை கண்டு மகிழ்ச்சி அடைந்தது பூங்காவில் அமர்ந்து ஓய்வு எடுத்து பொழுதை கழித்தனர்