தண்ணீர் குறைந்தாலும் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
திற்பரப்பு அருவியில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க குவிந்த சுற்றுலா பயணிகள்.
Update: 2024-03-17 12:25 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தளங்களில் திற்பரப்பு அருவியும் ஒன்று குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் இந்த திற்பரப்பு அருவிக்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார். விடுமுறை தினங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து அருவியில் குளித்து செல்கின்றனர். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு போகும் சூழல் உள்ள நிலையில் அணைகளிலும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்து உள்ளது. கடுமையான வறட்சி காரணமாக திற்பரப்பு அருவியிலும் வெள்ளத்தின் அளவு குறைவாகவே உள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது கோடை வெயிலை சமாளிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் உற்சாக குளியலிட்டு சென்றனர்.