முதலியார்க்குப்பம் படகு குழாமிற்கு சுற்றுலா பயணியர் வருகை
முதலியார்க்குப்பம் படகு குழாமிற்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-05-05 09:54 GMT
தமிழகத்தில் நிலவி வரும் கோடை வெப்பத்தை தவிர்க்க,கோடை விடுமுறையில் செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முதலியார் குப்பம் படகு குழாமிற்கு சுற்றுலா பயணியர் படையெடுத்து வருகை புரிகின்றனர்.
இங்குள்ள படகு குழாமில் சுற்றுலா பயணியர் கண்டுகளித்து அனுபவிக்க ஸ்பீடு போட் ,வாட்டர் ஸ்கூட்டர்,கயாக் போட் ,டிஸ்கோ படகு உள்ளிட்ட படகுகள் உள்ளன..வெப்பத்தை தவிர்க்க வரும் சுற்றுலா பயணிகள் மிக குளிர்ச்சியாகவும் இயற்கை சுற்றுச்சூழல் உடன் அடங்கிய இந்த குழாமில் தற்போது அதிகமாக சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படையெடுத்து வருகின்றனர்.
மேலும் இயற்கை ரசித்தவாறு படகு சவாரி செய்கின்றனர்.