தி. மலை அருகே 100 நாள் வேலை வழங்கக்கோரி மனு
100 நாள் வேலை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு வழங்கப்பட்டது .;
By : King 24X7 News (B)
Update: 2024-05-05 16:44 GMT
நூறு நாள் வேலை வழங்க கோரி மனு
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதிச் சட்டப்படி 100 நாள் வேலை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் சார்பில் இன்று மாவட்ட தலைவர் ரமேஷ் பாபு தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் மயில்வாகனம் அவர்களிடம் மனு அளித்தனர்.
அப்போது மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரணமல்லூர் வட்டார செயலாளர் சேகரன் மற்றும் கமிட்டி உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.