செம்மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்
பாலக்கோடு அருகே கணபதி கொட்டாய் கிராமத்தில் அனுமதியின்றி செம்மண் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
Update: 2024-07-01 09:26 GMT
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட கணபதி கொட்டாய் கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோதமாக அனுமதியின்றி செம்மண் கடத்துவதாக பாலக்கோடு வட்டாட்சியர் ஆறுமுகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தாசில்தார் ஆறுமுகம் நேற்று மாலை கணபதி கொட்டாய் பகுதியில் சோதனை நடத்தினார்.
அப்போது அங்குள்ள புறம்போக்கு நிலத்தில் டிராக்டரில் செம்மண் அள்ளி கொண்டிருந்தவர்கள் வட்டாட்சியரை கண்டதும் டிராக்டரை விட்டு விட்டு தப்பி ஓடினர். இதையடுத்து ஒரு யூனிட் செம்மண்ணுடன் டிராகடரை பறிமுதல் செய்து பாலக்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் பாலக்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்