சுங்கச் சாவடிக்கு எதிா்ப்பு - வியாபாரிகள் கடையடைப்பு

திருநெல்வேலி – தென்காசி நான்கு வழிச்சாலையில் சுங்கசாவடி அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2024-02-07 08:57 GMT
சுங்கச் சாவடிக்கு எதிா்ப்பு வியாபாரிகள் கடையடைப்பு

திருநெல்வேலி- தென்காசி நான்குவழிச் சாலையில் ஆலங்குளத்தை அடுத்துள்ள மாறாந்தையில் சுங்கச் சாவடி அமைக்கும் பணிகள் சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நான்குவழிச் சாலைப் பணிக்கான கருத்து கேட்புக் கூட்டத்தில் திருநெல்வேலி- தென்காசி நான்குவழிச் சாலையில் சுங்கச் சாவடி கிடையாது என அதிகாரிகள் கூறிய நிலையில், சுங்கச் சாவடி அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதை கண்டித்து ஆலங்குளம் நகர வியாபாரிகள் சங்கம், காய்கனி வியாபாரிகள் சங்கம், வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் ஆலங்குளத்தில் கடையடைப்பு மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, ஆலங்குளம் வியாபாரிகள் சங்கத் தலைவா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். வணிகா் சங்க பேரமைப்பு கன்னியாகுமரி மண்டல தலைவா் வைகுண்டராஜா, கூடுதல் செயலா் ஆா்.கே.காளிதாஸ், மாவட்டச் செயலா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆலங்குளம் எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிமரராஜா ஆகியோா் பேசினா். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News