தஞ்சாவூரில் பாரம்பரிய விழிப்புணர்வு பேரணி

Update: 2023-11-21 03:32 GMT
பாரம்பரிய விழிப்புணர்வு நடை பயணம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில், உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனொரு பகுதியாக தஞ்சாவூர் பெரிய கோவிலிலிருந்து அரண்மனை வளாகம் வரை பாரம்பரிய விழிப்புணர்வு பேரணியை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம், சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் புனித வளனார் பொறியியல் கல்லூரியை சார்ந்த 200 மாணவ, மாணவிகள் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பங்கேற்றனர். தொடர்ந்து கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.  தொடர்ந்து அவர்கள் தஞ்சாவூர் சங்கீத மஹாலில் நடைபெற்று வரும் தமிழக நடுக்கல் மரபு கண்காட்சியை பார்வையிட்டனர். நாளைய தினம் தஞ்சாவூர் பாரம்பரியம் என்ற தலைப்பில் சரஸ்வதி மகால் நூலகத்தில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், தஞ்சாவூர் வட்டாட்சியர் அருள்ராஜ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார், இந்திய மருத்துவ கழக துணை தலைவர் டாக்டர். சிங்காரவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News