பாரம்பரிய எருதுவிடும் விழா

ஒசூர் அருகே பிள்ளைக்கொத்தூரில் 50 ஆண்டுகளுக்கு பிறகு கிராம மக்கள் பாரம்பரிய எருதுவிடும் விழாவை நடத்தி மகிழ்ந்தனர்: இதில் நூற்றுக்கணக்கான காளைமாடுகள் பங்கேற்றன.

Update: 2024-03-05 12:58 GMT

ஒசூர் அருகே பிள்ளைக்கொத்தூரில் 50 ஆண்டுகளுக்கு பிறகு கிராம மக்கள் பாரம்பரிய எருதுவிடும் விழாவை நடத்தி மகிழ்ந்தனர்: இதில் நூற்றுக்கணக்கான காளைமாடுகள் பங்கேற்றன. 

ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள், நூற்றுக்கணக்கான காளைமாடுகள் பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பிள்ளைக்கொத்தூர் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு பாரம்பரிய எருதுவிடும் விழா இன்று நடைப்பெற்றது.. பிள்ளைகொத்தூர் கிராம மக்கள் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே இதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வந்தனர்.

மாடுகளுக்கு தனி கேளரிகளும், பொதுமக்களுக்கு காலை முதல் தொடர் அன்னதானங்களும் வழங்கப்பட்டது. தருமபுரி, இராயக்கோட்டை, சூளகிரி, பாகலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான காளைகள் கொம்புகளில் வண்ண தடுக்கைகளை கட்டிக்கொண்டு சீறி பாய்ந்தன.. காளைகளை அடக்க காளையர்களும் போட்டிப்போட்டதால் எருதுவிடும் விழா சுவாரஸ்யத்தை ஏற்ப்படுத்தியது.

  நூற்றுக்கும் அதிகமான போலிசார் பாதுகாப்பு பணியிலும், முன்னெச்சரிக்கையாக தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் இருந்தன.. இந்த எருதுவிடும் விழாவில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்றிருந்தனர்

Tags:    

Similar News