பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாரம்பரிய ரக நெல் ஏலம்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாரம்பரிய நெல் ரக ஏலத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Update: 2024-03-29 00:22 GMT

ஏலம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாரம்பரிய நெல் ரகம் ஏலம் கண்காணிப்பாளர் தாட்சாயணி தலைமையில் நடைபெற்றது .கருப்பு கவுனி நெல் 17 மூட்டை கிலோ ஒன்றுக்கு ரூ 95க்கும் தங்க சம்பா 17 மூட்டை கிலோ ஒன்றுக்கு ரூ 33 க்கும் சீராக சம்பா 11 மூட்டை கிலோ ஒன்றுக்கு ரூ 38 க்கும் மற்றும் பருத்தி 200 கிலோ ஒன்றுக்கு ரூ 76.09-க்கும் விலை போனது இந்த ஏலத்தில் விவசாயிகளும் வியாபாரிகளும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News