சேலத்தில் பாரம்பரிய முறையில் ஆடு,மாடுகளை அலங்கரித்து வழிபாடு

சேலத்தில் பாரம்பரிய ஆடு, மாடுகளுடன் பொங்கல் விழா செல்லபிராணிகளையும் அலங்கரித்து வழிபாடு நடைபெற்றது.

Update: 2024-01-17 14:41 GMT

பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாட்டம்

சேலம் கொண்டலாம்பட்டி வெள்ளாளர் தெருவில் பாரம்பரிய ஆடு, மாடுகள் மற்றும் செல்லபிராணிகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதாவது காலபைரவரான நாய், நந்தி பகவானான மாடு, கோ மாதாவான பசு, முனியப்பனின் வாகனமான குதிரை ஆகியவை குளிப்பாட்டி அலங்கரிக்கப்பட்டன.

தொடர்ந்து பாரம்பரிய முட்டுக்கிடா, சண்டைக்கோழி, பந்தய புறா, ரேக்ளா குதிரை, நடன குதிரை, பேசும் கிளி, கிரேப் பறவை ஆகியவையும் குளிப்பாட்டி அலங்கரிக்கப்பட்டது. அவைகளுக்கு மாலை அணிவித்து பொங்கலிட்டு பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

இதுபற்றி செல்லபிராணிகளை வளர்த்து விற்பனை செய்து வரும் பிரபா பெட் பிரபாகரன் கூறுகையில், பொங்கல் பண்டிகை நாட்களில் நமது பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வகையிலும், நமது முன்னோர்கள் வாழ்க்கையுடன் ஒன்றி இருந்த செல்லப்பிராணிகளை கவுரவிக்கவும் அவைகளுக்கும் விழா எடுத்துள்ளோம் என்றார்.

Tags:    

Similar News