மழை நீரால் போக்குவரத்து பாதிப்பு; சாலை துண்டிக்கப்படும் அபாயம்
கனமழையால் மதுராந்தகத்தில் திருச்சி - சென்னை தேசிய புறவழி சாலையில் ஏரிக்கரை அருகில் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் சாலையில் தேங்கி உள்ளது.;
Update: 2024-01-08 15:58 GMT
கனமழையால் மதுராந்தகத்தில் திருச்சி - சென்னை தேசிய புறவழி சாலையில் ஏரிக்கரை அருகில் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் சாலையில் தேங்கி உள்ளது.
மதுராந்தகம் தேசிய புறவழி சாலையில் தேங்கியுள்ள தண்ணீரால் போக்குவரத்து பாதிப்பு,சாலை துண்டிப்பு ஏற்படும் அவல நிலை. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் திருச்சி To சென்னை தேசிய புறவழி சாலையில் ஏரிக்கரை அருகில் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் சாலையில்தேங்கி உள்ளதால் தொடர்ந்து 15 மணி நேரமாகபெய்த கனமழை காரணமாக சாலையில் தேங்கியுள்ளது. தண்ணீர் வடிவதற்கான வடிவ கால்வாய் இருந்தும் அதிக அளவில் மழை கொட்டி தீர்த்து வருவதால் தண்ணீர் தேங்கியுள்ளது.. இதனால் திருச்சியில் இருந்து சென்னை வரும் வாகனங்கள் தண்ணீரில் மிதந்து வருகின்றன.. எந்த நேரத்திலும் சாலை துண்டிப்பு ஏற்படும் அபாய நிலை உருவாகியுள்ளது போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்ற கோரிக்கை.