ஒத்தக்கண் பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு
திண்டுக்கல்லில் மழையால் ஒத்தக்கண் பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழைநீரில் சிக்கிய பள்ளி வாகனத்தை மாநகராட்சி ஊழியர்கள் மீட்டனர்,
Update: 2024-01-09 13:38 GMT
திண்டுக்கல் மாநகராட்சி ஒத்தக் கண் பாலத்தில் மழை நீரில் பள்ளி பேருந்து சிக்கிக் கொண்டது. திண்டுக்கல் மாநகராட்சி மூலம் பேருந்து மீட்கப்பட்டது. இந்த பாலம் சமீபத்தில் தான் ரூ.15லட்சம் செலவில் செம்மைப்படுத்தப்பட்டது. ஒத்தக்கண்ணன் படத்தில் அடிக்கடி மழை நீர் தேங்கி சாக்கடை நீரும் கலந்து வருவதால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தனர். பணிகள் செய்த போதும், பயனில்லாமல் உள்ளது. இதனால் வாகனங்கள் தொடர்ந்து சிக்கி தவிக்கின்றன. இந்நிலையில் கலெக்டர் பூங்கொடி தலைமையிலான குழுவினரும், மேயர் இளமதி தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகளும் ஒத்தக்கண் பாலத்தை ஆய்வு செய்தனர்.