வண்ணார்பேட்டை பாலத்தில் சீராக சென்ற போக்குவரத்து
வெள்ளத்தால் சேதமடைந்த வண்ணாரப்பேட்டை பாலத்தில் சீரமைப்பு பணிகள் முடிவுற்றதால் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.
Update: 2023-12-22 06:43 GMT
நெல்லையில் பெய்த வரலாறு காணாத தொடர் மழையால் வெள்ளம் சூழ்ந்து பல்வேறு ஆற்று பாலங்கள் சேதம் அடைந்தது. அந்த வகையில் வண்ணார்பேட்டை பைபாஸ் பாலம் சேதமடைந்த நிலையில் தற்போது வெள்ள நீர் வற்றியுள்ளதால் சீரமைப்பு பணி தொடர்ந்து நடைபெற்றது. அந்த வகையில் நேற்று முழுமையாக பாலம் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று போக்குவரத்து சீராக சென்றது.