குடிமகன்களால் தடுமாறும் போக்குவரத்து !
குடிமகன்களின் அட்டூழியம் தாங்க முடியவில்லை. பட்டப் பகலிலேயே அவ்வழியே வரும் வாகனங்களின் முன் நின்று கலாட்டா செய்வது வாடிக்கையாக வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்;
By : King 24x7 Angel
Update: 2024-07-13 05:20 GMT
குடிமகன்களின் அட்டூழியம்
திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அடுத்த தினசரி மார்க்கெட்,உழவர் சந்தை, ஸ்டேட் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க் கூட்டுறவு வங்கி உள்ளடக்கிய பகுதியின் அருகில் இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளது. எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்து கொண்டே இருக்கும் இந்த பகுதியில் அருகருகே டாஸ்மாக் கடைகள் இருப்பதால் குடிமகன்களின் அட்டூழியம் தாங்க முடியவில்லை.
பட்டப் பகலிலேயே அவ்வழியே வரும் வாகனங்களின் முன் நின்று கலாட்டா செய்வது வாடிக்கையாக வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்