தாழ்வாக செல்லும் கேபிள் வயரால் போக்குவரத்து சிக்கல்

விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன் இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

Update: 2024-02-06 06:47 GMT

கேபிள் வயரால் போக்குவரத்து சிக்கல்

பழனி நகர் ஒன்பதாவது வார்டு தெற்கு ரத வீதியில் மிகவும் தாழ்வாக இன்டர்நெட் கேபிள் லைன் தொங்குகிறது. பிஎஸ்என்எல் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் தகவல் தெரிவித்தும் எங்களுக்கு தெரியவில்லை என்று தான் தகவல் வருகிறது. விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன் இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விபரீதம் அறியாத இளைஞர்கள் சில நேரங்களில் தொங்குகிறார்கள். இதனால் விபத்துக்கள் ஏற்படும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News