போக்குவரத்து விதிமீறல்; 247 வழக்குப்பதிவு

வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல் காரணமாக 247 வழக்குப்பதிவு; 27 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Update: 2023-12-25 16:14 GMT

வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல் காரணமாக 247 வழக்குப்பதிவு; 27 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டம் கிறிஸ்மஸ் தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீசார் வாகனத்தை தணிக்கையில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்டம் முழுவதும் மூன்று கூடுதல் துணை கண்காணிப்பாளர், 18 காவல் ஆய்வாளர்கள் 157 உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 486 என மொத்தம் வேலூரில் 750 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கிறிஸ்மஸ் தின விழாவில் வேலூர்,காட்பாடி,பள்ளிகொண்டா, குடியாத்தம் ,பேரணாம்பட்டு, கே வி குப்பம், முன் எச்சரிக்கை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தணிக்கையில் வாகனங்களை அதிவேகமாக பயணித்தல் போக்குவரத்து விதிமுறைகள் மீறல்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை இயக்குதல் நள்ளிரவில் மட்டும் 781 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது 247 வாகனங்கள் வழக்குகள் பதியப்பட்டுள்ளது 27 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

வேலூர் அருக காரின் டயர் வெடித்து மேம்பாலத்தில் விபத்து ஏற்பட்டதில் பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் சேண்பாக்கம் மேம்பாலத்தில் சென்னை நோக்கி கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கார் அதிவேகமாக வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக காரின் முன் பக்க டயர் வெடித்ததில் தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்து இரு முறை உருண்டுள்ளது. அந்த சமயம் சாலையில் சென்று கொண்டிருந்த இரு டூவீலர்கள் மீது கார் மோதியதில் டூவிலரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்தவர்கள் மற்றும் டூவீலர்களில் பயணித்தவர்கள் என 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தின் காரணமாக மேம்பாலத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் நின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி போலீசார் போக்குவரத்தை சரி செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News