தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம்
கள்ளகுறிச்சி மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு வட்டார அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது.;
Update: 2024-01-11 05:43 GMT
தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம்
கள்ளக்குறிச்சி அடுத்த அரியபெருமானுார் நடுநிலைப்பள்ளியில், புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு வட்டார அளவிலான பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு உதவி திட்ட அலுவலர் பழனியாப்பிள்ளை தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா முன்னிலை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் வெங்கடேசன் வரவேற்றார். மாவட்டத்தில் உள்ள 8 கல்வி ஒன்றியங்களில், 15 வயதுக்கு மேற்பட்ட எழுத, படிக்க தெரியாதவர்கள் என 11,699 நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் மூலம், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களை கொண்டு அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.