நாகை மாவட்டம் கீழ்வேளூரில் சமையல் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் சமையல் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டது.

Update: 2024-06-06 13:58 GMT

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் சமையல் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டது.


நாகை மாவட்டம் கீழ்வேளூரில் சமையல் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம்  அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு ஏராளமான மாணவர்கள் பயன்படுத்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து இந்த திட்டம்  அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் அதற்கான சமையல் பொறுப்பாளர்களுக்கு சமையல் பயிற்சி  கீழ்வேளூர் வட்டார இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியினை  திட்ட இயக்குனர்   (மகளிர் திட்டம்)  முருகேசன் தொடங்கி  வைத்தார்.

உதவித் திட்ட அலுவலர்கள் இந்திராணி, காமராஜ், வட்டார இயக்க மேலாளர் ராஜகோபால், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள். தங்கமணி, செந்தில்குமார்,ரவிச்சந்திரன்,மகேஸ்வரி, சித்ரா,கிருபாதேவி உள்ளிட்ட பலர் கொண்டார்கள். இந்த பயிற்சியில் கீழ்வேளூர் , நாகப்பட்டினம், மற்றும் திருமருகல் வட்டாரத்திற்கு உட்பட்ட சமையல் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News