விவசாயிகளுக்கு பயிற்சி

பண்ணை பள்ளி விவசாயிகளுக்கு வேளாண்மை துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-12-29 15:16 GMT

பண்ணை பள்ளி விவசாயிகளுக்கு வயல்வெளி பயிற்சி ஊத்தங்கரை, ஊத்தங்கரையில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ், நெற்பயிர் சாகுபடியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறைகளை கடைபிடித்து சாகுபடி செய்வது குறித்து, கிருஷ்ணகிரி பாம்பாறு உபவடி நிலப்பகுதி - நிலை விவசாயிகளுக்கு வயல்வெளி பயிற்சி காட்டனூர், வேலம்பட்டி,என்.வெள்ளாலபட்டி மற்றும் கிட்டம்பட்டி ஆகிய நான்கு கிராமத்தில் பண்ணைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

பண்ணையளவில் கிடைக்கக்கூடிய இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு, சத்துக்கரைசல், வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகள் தயாரித்து பயன்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. இதில், ஊத்தங்கரை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முனைவர் கருப்பையா, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக வேளாண்மை அலுவலர் பிரியதர்சினி கலந்துகொண்டு விவசாயிகளுக்கு பயிற்ச்சியளித்தார். துணை வேளாண்மை அலுவலர் சரவணன், மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் முனிராஜ் மண் மாதிரி எடுக்க வேண்டியதின் அவசியம் குறித்தும் எடுக்கும் முறை குறித்தும் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்துகாட்டினர்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேளாலர் சதீஷ்குமார், உதவி தொழில்நுட்ப மேளாலர் சாரதி, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்ட பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர் சரத்குமார் மற்றும் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்ட தொகுப்பு ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News