மரவள்ளியில் செம்பேனை கட்டுபடுத்த விளக்கம்

மல்லசமுத்திரம் வட்டாரத்தில் மரவள்ளி சாகுபடியில் செம்பேன் தாக்குதலை தவிர்க்க விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2024-02-02 12:48 GMT

விவசாயிகளுக்கு பயிற்சி 

மல்லசமுத்திரம் வட்டாரத்தில் தற்போதுள்ள பருவநிலை காரணமாக மரவள்ளி சாகுபடியில் செம்பேன் தாக்குதல் பரவிவருகின்றது. பாதிக்கப்பட்டி செடிகளின் நிலைகளில் அடிப்பகுதியில் செம்பேன் காணப்படுவதோடு, இலைகள் பச்சையம் இழந்து காய்ந்துவிடும்.

பின்னர் இலைகள் உதிர்ந்து மகசூல் பாதிப்பு ஏற்படும். எனவே, இதைதவிர்க்க பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தலாம். குறிப்பாக மரவள்ளி சாகுபடியில் செம்பேன் தாக்குதலை கட்டுபடுத்த ஒருலிட்டர் தண்ணீருக்கு 2மில்லி ஓப்ரான் அல்லது 2மில்லி புரோபர்கைட் அல்லது பெசோகுயின் 2மில்லி அல்லது 1மில்லி ஸ்பைரோமெசிபன் அல்லது 4கிராம் நனையும் கந்தகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீரில் 2மில்லி ஒட்டும் திரவத்துடன் சேர்த்து 15நாட்கள் இடைவெளியில் 2முறை தெளிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மல்லசமுத்திரம் தோட்டக்கலைதுறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags:    

Similar News