விவசாயிகளுக்கு தென்னை மரம் ஏற பயிற்சி
சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு தென்னை மரம் ஏறும் பயிற்சி முகாம் நடந்தது.
சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தென்னை வளர்ச்சி வாரியம் நிதி உதவியுடன் 2 பயிற்சியாளர்களை கொண்டு உழவர்கள், பண்ணை மகளிர் மற்றும் படித்த வேலை இல்லாதவருக்கான தென்னை மரம் ஏறும் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி காலமான 6 நாட்களிலும் தென்னை மரம் ஏறும் கருவிகளை கையாளும் பயிற்சி, சாகுபடி தொடர்பான அனைத்து தொழில்நுட்பங்களும் பயிற்சியாகவும் செயல்விளக்கமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு தென்னை மரம் ஏறும் கருவி இலவசமாக வழங்கப்பட்டது. பயிற்சியினை சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் தொடங்கி வைத்தார். தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர் மாலதி பயிற்சி ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
பயிற்சியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் பயிற்சி தொடக்க நாளில் இருந்து ஒரு வருடம் செல்லுபடியாக கூடிய வகையில் ரூ.5 லட்சத்துக்கான காப்பீட்டு தொகையை தென்னை வாரியமே ஏற்றுக்கொள்கிறது என்று அதிகாரிகள் கூறினர்.