ராமநாதபுரம் விவசாயிகளுக்கு பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருகே விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

Update: 2024-05-28 04:16 GMT

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருகே விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.


ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மதுரை வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவி ஜே. ஆனி ஹிங்கிஸ், நாரையூரணி கிராமத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் பொருட்டு எள்ளு செடியில் அசுவினி பூச்சி கட்டுப்படுத்துவது குறித்து செயல்முறை விளக்கமளித்தார். அசுவினிகள் எள் தாவரங்களின் முக்கிய பூச்சியாகும் .இது 10-15 சதவீதம் மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.இலைகள் மஞ்சள் நிறமாக மாறும் இலை குருத்துகளின் வட்டப் பகுதியை சுற்றிலும் கூட்டமாக காணப்படும்.பாதிக்கப்பட்ட தாவரங்கள் முறுக்கப்பட்ட அல்லது சுருண்ட இலைகள் மற்றும் வீங்கிய கிளைகளைக் காட்டுகின்றன.இதனால் தாவரத்தின் வளர்ச்சி குன்றியிருக்கும் என்று அசுவினி பூச்சியின் தாக்குதல் அறிகுறிகள் குறித்தும் அதனை கட்டுப்படுத்துவதற்காக விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. இதனை அப்பகுதியில் எள்ளு செடி விளைவிக்கும் விவசாய மக்கள் ஆர்வமுடன் கற்றுக் கொண்டு பயன் பெற்றனர்.
Tags:    

Similar News