மாமல்லபுரம் கல்லூரியில் நவீன முப்பரிமாண நுட்ப பயிற்சி

மாமல்லபுரம் கல்லூரியில் நவீன முப்பரிமாண நுட்ப பயிற்சி நடைபெற்றது.

Update: 2024-04-27 10:58 GMT

பயிற்சியில் கலந்து கொண்டவர்கள்

தமிழக கலை, பண்பாட்டுத் துறையின்கீழ், மாமல்லபுரத்தில் அரசு மற்றும் சிற்பக்கலைக் கல்லுாரி இயங்குகிறது. இங்கு, பாரம்பரிய மரபு கட்டடக்கலை, கல், உலோகம், மரம், சுதை ஆகிய சிற்பக் கலைகள், ஓவியக்கலை ஆகிய கலை படிப்புகள், நான்காண்டுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

வரைபடம் உள்ளிட்டவற்றில் மேம்பட்டு வரும் நவீன தொழில்நுட்பங்களை, இக்கல்லுாரி மாணவர்கள் அறியும் வகையில், இங்கு ஏற்கனவே ஆட்டோகேட், 2டி உள்ளிட்டவை பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், மாணவர்களுக்கு, 3டி எனப்படும் நவீன முப்பரிமாண நுட்ப பயிற்சியளிக்க, கலை மற்றும் பண்பாட்டுத் துறை நிர்வாகம் அறிவுறுத்தியது.

இதையடுத்து, கடந்த 22-ம் தேதி முதல் நேற்று வரை, சென்னை, யாளி நிறுவனம் சார்பில், கல்லுாரி முதல்வர் ராமன் மேற்பார்வையில் பயிற்சிளிக்கப்பட்டது.

Tags:    

Similar News