வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்!
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் பணி புரியும் அலுவலருக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது. வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு தேர்தல் அதிகாரியும், மாவட்ட தலைவருமான கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி பேசினார்.
இது குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, கோபி செட்டிபாளையம், அந்தியூர், பவானி, பெருந்துறை உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியும் 102 மேற்பார்வையாளர்கள், 102 உதவியாளர்கள், 120 நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மேற்பார்வையாளர்கள். உதவியாளர்கள், நுண்பார்வையாளர்கள் தங்களுக்கான ஒதுக்கப்பட்ட பணிகள் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கையாளும் முறை குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. என்றார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியார் (தேர்தல்) ஜெயராமன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.