அட்மா திட்டத்தின் கீழ் உள்மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி

அட்மா திட்டத்தின் கீழ் உள்மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.;

Update: 2024-06-15 11:34 GMT

அட்மா திட்டத்தின் கீழ் உள்மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ்  உள்மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சியில் ரசாயன உரங்களை குறைத்து பயன்படுத்துவதன் நன்மைகள் குறித்து செங்கமங்கலம் கிராம விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.  இதில் வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) எஸ்.ராணி தலைமை வகித்து பேசுகையில், இரசாயன உரங்களை குறைத்து இயற்கை உரங்களான பசுந்தாள் உரங்கள், மக்கிய எரு, அசோலா, உயிர் உரங்கள் போன்றவைகளைப் பயன்படுத்தலாம். 

Advertisement

உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, திரவ ரைசோபியம் மற்றும் பசுந்தாள் உரங்களான சணப்பு, தக்கைப்பூண்டு ஆகியவை மானிய விலையில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருந்து பெற்று விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்" என்றார்.  ஓய்வு பெற்ற உழவியல் துணை பேராசிரியர் ராமசாமி பேசுகையில், பயிர் சுழற்சி முறை குறித்தும், மண் வளம் காக்கும் முறைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.  வட்டார தொழில்நுட்ப மேலாளர் பொன்.செல்வி வரவேற்று பேசுகையில் அட்மா திட்டத்தின் கீழ் உள் மாவட்டம், வெளி மாவட்ட பயிற்சி, கண்டுணர்வு சுற்றுலா செயல்விளக்கங்கள், பண்ணைப்பள்ளி வகுப்புகள் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார். 

பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பொன்.செல்வி, உதவி தொழில்நுட்ப மேலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் செய்திருந்தனர்.  நிறைவாக  வேளாண்மை உதவி அலுவலர் கே.கோகிலா நன்றி கூறினார். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

Tags:    

Similar News