ரத்தனகிரி விவசாயிகளுக்கு கிராம வேளாண் முன்னேற்ற குழு குறித்த பயிற்சி

ரத்தனகிரி விவசாயிகளுக்கு கிராம வேளாண் முன்னேற்ற குழு குறித்து பயிற்சி நடைபெற்றது.;

Update: 2024-06-30 09:15 GMT

பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள்

 கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் வட்டம் ரத்தினகிரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளை வேளாண்மை துறையின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் பதினோரு கிராமங்கள் உள்ளடக்கிய விவசாயிகளுக்கு கிராம வேளாண் முன்னேற்ற குழு குறித்து விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் ஜான் லூர்து சேவியர் தலைமையில் நடைபெற்றது துணை வேளாண்மை அலுவலர் வெற்றிவேல், மானிய திட்டம் மற்றும் சொட்டுநீர் பாசனம் மற்றும் பராமரிப்பு குறித்து விளக்கவுரை ஆற்றினார்,

Advertisement

இவரைத் தொடர்ந்து உதவி விதை அலுவலர் அருள் கணேசன் அவர்கள் துவரை மற்றும் நிலக்கடலையில் விதைப்பண்ணை குறித்து விவசாயிகள் ஆதாரம், சான்று நிலை விதை பண்ணை அமைத்து தரமான விதைகளை கொள்முதல் குறித்து விளக்க உரை ஆற்றினார் உதவி வேளாண் அலுவலர் கமல் கிருஷ்ணராஜ் அவர்கள் கலைஞர் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில் வழங்கப்படும் இடுப்பொருட்கள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கினார்.

  உதவி தோட்டக்கலை அலுவலர் வேடியப்பன் அவர்கள் இயற்கை விவசாய முறையில் காய்கறி சாகுபடி மற்றும் துறை சார்ந்த மானிய திட்டம் குறித்து எடுத்துரைத்தார் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் கீதா அட்மா திட்டம் மற்றும் உழவன் செயலி குறித்து விளக்கினார்.

இப்ப பயிற்சியில் விவசாயிகள் மண் மாதிரி சேகரிப்பு குறித்து செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது

Tags:    

Similar News