நிலக்கடலை பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி
நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Update: 2024-01-31 08:27 GMT
பருகூர் வட்டாரத்தில் நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி நடைபெற்றது. பருகூர் வட்டாரத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) சீனிவாசன் அவர்கள் தலைமை தாங்கினார். புளியம்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் மூலம் நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து பண்ணைப்பள்ளி பயிற்சி வழங்கப்பட்டது.
இப்பயிற்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) சீனிவாசன் அவர்கள் தலைமையில் நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்தும், உழவர் கடன் அட்டை பெறும் முறை மற்றும் பயிர் காப்பீடு குறித்து பேசினார். இப்பயிற்சியில் 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர்.