விவசாயிகளுக்காக சீர்மிகு கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி!
விவசாயிகளுக்காக சீர்மிகு கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நடைபெற்றது.
Update: 2024-03-09 07:22 GMT
புதுகோட்டை குடுமியாண்மலை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கரும்பு விவசாயிகளுக்காக சீர்மிகு கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி இன்று நடைபெற்றது. இப்பயிற்சியை கல்லூரி முதல்வர் நக்கீரன் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இப்பயிற்சியில் கோத்தாரி சர்க்கரை ஆலை, முதுநிலை மேலாளர் செந்தில்வேல் கலந்து கொண்டு உரையாற்றினார். இப்பயிற்சியில் முனைவர்கள் திருவேங்கடம், சந்திரசேகரன், சண்முகநாதன், மற்றும் குமணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.