குரூப் 4 தேர்வு பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்
ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குரூப் 4 தேர்வு பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கான பயிற்சி கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடந்தது.;
Update: 2024-06-07 17:19 GMT
பயிற்சி கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் மாவட்ட ஆட்சியர் திருமதி வளர்மதி தலைமையில் ஒன்பதாம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு பணிகளில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் பயிற்சி கூட்டம் நடைபெற்றது. பயிற்சி கூட்டத்தின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலக பிரிவு அலுவலர் பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.