புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவையொட்டி நின்று செல்லும் ரெயில்கள்

மேல்நாரியப்பனூரில் மேலும் 2 ரெயில்கள் நின்று செல்லும்

Update: 2024-06-01 08:04 GMT

ரெயில்கள்

சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே மேல்நாரியப்பனூரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் (22153) மேல்நாரியப்பனூர் ரெயில் நிலையத்தில் வருகிற 11-ந் தேதி முதல் 14-தேதி வரை இரவு 10.45 மணிக்கு சென்றடைந்து அங்கு ஒரு நிமிடம் தற்காலிகமாக நின்று செல்லும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. தற்போது மேலும் 2 ரெயில்கள் மேல்நாரியப்பனூர் ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் தற்காலிகமாக நின்று செல்லும் என அறிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரி-மங்களூரு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (16855) வருகிற 13-ந் தேதி இரவு 7.49 மணிக்கு மேல்நாரியப்பனூர் சென்றடைந்து, அங்கு ஒரு நிமிடம் நின்று செல்லும். இதேபோல் யஷ்வந்த்பூர்-புதுச்சேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (16573) வருகிற 15-ந் தேதி அதிகாலை 2.24 மணிக்கு சென்றடைந்து அங்கு ஒரு நிமிடம் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News