சேலம் மாவட்டத்தில் 29 தாசில்தார்கள் இடமாற்றம்

சேலம் மாவட்டத்தில் 29 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி உத்தரவிட்டார்.;

Update: 2024-06-30 04:13 GMT

ஆட்சியர் பிருந்தாதேவி 

சேலம் மாவட்டத்தில் வருவாய்த்துறையில் பல்வேறு நிலையில் பணிபுரிந்து வந்த 29 தாசில்தார்கள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மேட்டூர் தாசில்தார் விஜி, டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளரின் நேர்முக உதவியாளராகவும், கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன், மாவட்ட நில எடுப்பு மற்றும் மேலாண்மை தனி தாசில்தாராகவும், காடையாம்பட்டி தாசில்தார் ஹசீன்பானு, காடையாம்பட்டி தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

இதேபோல் தலைவாசல் தாசில்தார் அன்புசெழியன், சேலம் (முத்திரை கட்டணம்) தனி தாசில்தாராகவும், பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் மாணிக்கம் சேலம் மாவட்ட மேலாளர் (நீதியியல்) ஆகவும், சங்ககிரி தாசில்தார் அறிவுடை நம்பி, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் அலகு-2 தனி தாசில்தார் ஆகவும், சேலம் தெற்கு தனி தாசில்தார் தமிழ் முல்லை, சந்தியூர் டாஸ்மாக் கலால் மேற்பார்வை அலுவலராகவும், சேலம் கலால் மாவட்ட மேலாளர் ஆர்த்தி, மாவட்ட கலெக்டர் அலுவலக தனி தாசில்தார் ஆகவும் என மாவட்டம் முழுவதும் 29 தாசில்தார்கள் பல்வேறு இடங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் துணை தாசில்தார் நிலையில் இருந்து வரும் நாகலட்சுமி, ராமகிருஷ்ணன், மனோகரன், பார்த்தசாரதி, காஞ்சி தேசாய், ராஜமாணிக்கம், காத்தமுத்து ஆகியோர் தாசில்தார் ஆகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News