மின்மாற்றி இயக்கி வைப்பு நிகழ்ச்சி
மூங்கில்துறைப்பட்டு அடுத்த லக்கி நாயக்கன்பட்டியில் புதிய மின்மாற்றி இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-05 11:28 GMT

மின்மாற்றி இயக்கி வைப்பு நிகழ்ச்சி
மூங்கில்துறைப்பட்டு அடுத்த லக்கி நாயக்கன்பட்டியில் 8 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய மின்மாற்றி இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, சங்கராபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் அசோக் குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் ஷீலா ராஜேந்திரன், சங்கராபுரம் மின்வாரிய செயற் பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் நுார் முகமது முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்றனர்.