திருக்கோவிலூரில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து !

திருக்கோவிலூரில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2024-07-06 06:13 GMT

தீ விபத்து

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் முன்பு கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்று சுவரை ஒட்டியவாறு மின்மாற்றி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றி இன்று அதிகாலை பயங்கர சத்தத்துடன் வெடித்து தீபிடித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக பேருந்து நிலையத்தில் திருக்கோவிலூர் தீயணைப்பு மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு படையினர் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்த போதிலும் டிரான்ஸ்பார்மர் அருகில் இருந்த பயணிகள் நிழற்குடை, போக்குவரத்து போலீசார் சாலையின் நடுவே வைத்திருந்த பிளாஸ்டிக் டிவைடர், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம், தள்ளுவண்டி கடைகள் உள்ளிட்டவைகள் தீயில் கருகி சேதமானது.

Tags:    

Similar News