பக்தர்களிடம் திருநங்கைகள் கட்டாய பணம் வசூல்
பழனி கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம் திருநங்கைகள் மறைத்து கட்டாய வசூலில் ஈடுபடுகின்றனர் .;
By : King 24x7 Angel
Update: 2024-03-02 11:00 GMT
திருநங்கைகள் கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்கின்றனர்
பழனி கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம் திருநங்கைகள் மறைத்து கட்டாய வசூலில் ஈடுபடுகின்றனர். பழனி அரசு மருத்துவமனை பின்புறம் வாசலில் கோயிலுக்குச் செல்லும் வெளியூர் பக்தர்களிடம் இப்பகுதியில் காத்திருக்கும் 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கட்டாய பணம் வசூலிக்கின்றனர். பணம் கொடுக்கவில்லை என்றால் மிரட்டி பணம் வசூல் செய்கின்றனர். இதனால் பழனி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மன உளைச்சலில் ஈடுபடுகின்றனர். சுவாமி தரிசிக்கு வந்த இடத்தில் தகராறு என மனம் நொந்து கொள்கின்றனர்.பழனி நகர் காவல் துறையினர் திருநங்கைகளிடமிருந்து பக்தர்களை காக்க வேண்டும் கட்டாய வசூல் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.