விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய போக்குவரத்து துறை அமைச்சர்
அரியலூர் அருகே அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
By : King 24X7 News (B)
Update: 2024-02-09 15:59 GMT
அரியலூர் மாவட்டம் குழுமூர் புனித பிலோமினாள் மேல்நிலைபள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. இதில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு 163 மாணவ, மாணவிகளுக்கு 7.88 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இதேபோல் தளவாய் அரசு மேல்நிலைபள்ளியில் பயிலும் 49 மாணவ, மாணவிகளுக்கு 2.36 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மேலும் குழுமூர், மணப்பத்தூர், சோழன்குடிகாடு, அயன்தத்தனூர்,
அங்கனூர், சன்னாசிநல்லூர், தளவாய் உள்ளிட்ட கிராமங்களில் பொதுதேர்வை எதிர்கொள்ள மாணவ, மாணவிகளுக்கு மாதிரி வினா, விடை தொகுப்பு வழங்கபட்டது.