போக்குவரத்து பணிமனை ஊழியர் கிணற்றில் சடலமாக மீட்பு
சேலத்தில் ராசிபுரத்தை சேர்ந்த போக்குவரத்து கழக பணிமனை ஊழியர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.;
சடலமாக மீட்பு
நாமக்கல் மாவட்டம்,ராசிபுரம் பக்கமுள்ள மலையம்பாளையத்தை சேர்ந்தவர் சித்தையன் (50). சேலம் காந்தி ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் வாகனத்தை தூய்மை செய்யும் வேலை செய்து வந்தார். இவரது தாய்மாமா சாமுவேல் என்பவரது வீடு சேலம் ஜாகீர் சின்னம்மாப்பாளையத்தில் இருக்கிறது.
இவரை பார்ப்பதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு சித்தையன் வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் அங்குள்ள மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான கிணற்றில் சித்தையன் சடலமாக மிதந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் சூரமங்கலம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து உடலை மீட்டனர். விசாரணையில் சித்தையன், போதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.