கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அதிநவின சிகிச்சை துறை

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அதிநவின வசதிகளுடன் மயக்கவியல் தீவிர சிகிச்சை துறை திறக்கப்பட்டது.

Update: 2024-06-06 13:21 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் புதிதாக மயக்கவியல் துறை சார்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய மயக்க மருந்துவியல் துறை திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை மருத்துவ கல்லூரி முதல்வர் பூவதி ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி புதிய துறையை துவக்கி வைத்தார். மேலும் இந்த துறையில் நோயாளிகளுக்கான 10 படுகைகள் வசதி கொண்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய மயக்கவியல் மருந்துவம் மற்றும் இருதய செயற்கை சுவாசம் கூடிய ஆய்வகங்கள் மருத்துவமனையில் செயல்பட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், மருத்துவர்கள் மது, செல்வராஜ் மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இந்த அதிநவின வசதிகளால் மருத்துவமனையில் மேலும் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News