உயிருக்கு போராடிய பசு மாட்டுக்கு சிகிச்சை !
உடல்நலம் பாதிக்கப்பட்ட மாட்டை மீட்டு மருத்துவ பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-16 06:53 GMT
பசு மாட்டுக்கு சிகிச்சை
திண்டுக்கல் நாகல்நகர் வடக்கு சவுராஷ்டிராபுரம் பகுதியில் நேற்று பசு மாடு ஒன்று உயிருக்கு போராடுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. மாநகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பின் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் நேரில் வந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட மாட்டை மீட்டு மருத்துவ பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர்.