சிவகாசி ஊராட்சி ஒன்றிய பகுதியில் மரக்கன்று நடும் பணி !!

சிவகாசி ஊராட்சி ஒன்றிய பகுதியில் மரக்கன்று நடும் பணிகள் தீவிரம்.;

Update: 2024-06-03 12:14 GMT

மரக்கன்று நடும் பணி

சிவகாசி யூனியனில் 54 ஊராட்சிகளில் 12ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நடும் விழா தீவிரம்... விருதுநகர் மாவட்டம், சிவகாசி யூனியனில் 54 ஊராட்சிகளில் 12ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நடும் விழா தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும்,கால நிலை மாற்றத்தை வலியுறுத்தியும் பல்லுயிர் பாதுகாப்பு தினத்தையொட்டி, சிவகாசி யூனியனில் 54ஊராட்சிகளில் மரக்கன்றுகளை நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் ஆனையூர் ஊராட்சியில் ஊராட்சி அலுவலகம் மற்றும் பெரியார் சமத்துவபுரம் மற்றும் சாலையோரத்தில்,புங்கன்,புளி அத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.

Advertisement

ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிநாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த மரக்கன்று விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புகழேந்தி,சிவகுமார்,மாடசாமி மேனேஜர் கண்ணன்,ஊராட்சி செயலா் பாலசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பல்லுயிர் பெருக்க சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மரக்கன்று நடுவோம் என உறுதி மொழியேற்று,பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சிவகாசி யூனியனில் 54 ஊராட்சிகளில் 12ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நடைபெறுவதாக யூனியன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News