மறைந்த விஜயகாந்திற்கு ஈரோடு மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அஞ்சலி
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு ஈரோடு மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இரண்டு நிமிட மெளன அஞ்சலி;
By : King 24x7 Website
Update: 2023-12-29 18:28 GMT
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு ஈரோடு மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இரண்டு நிமிட மெளன அஞ்சலி
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் நாகரத்தினம் சுப்ரமணி தலைமையில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட மாமன்ற உறுப்பினர்கள் தங்களது பகுதி பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தினர். இந்த கூட்டத்தில் மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்திற்கு இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தமாக கேட்டுக் கொள்ளப்பட்டது . இதனையடுத்து மேயர் நாகரத்தினம் தலைமையில் திமுக , அதிமுக , காங்கிரஸ் உறுப்பினர்கள் இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர் .இதில் மாநிறாட்சி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.