ஆர்.எம்.வீரப்பன் மறைவிற்கு தமிழச்சி தங்கபாண்டியன் அஞ்சலி

ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தமிழச்சி தங்க பாண்டியன்;

Update: 2024-04-10 06:35 GMT
ஆர்.எம்.வீரப்பன் மறைவிற்கு தமிழச்சி தங்கபாண்டியன் அஞ்சலி

  நேரில் சென்று அஞ்சலி

  • whatsapp icon


தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், எம்.ஜி.ஆர் கழகம் கட்சியின் நிறுவனருமான ஆர்.எம்.வீரப்பன் காலமானார். 98 வயதானஆர்.எம். வீரப்பனுக்கு இன்று காலை மூச்சு திணறல் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் திரையுலகினறும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் திமுக தென்சென்னை தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் .

ஆர்.எம்.வீரப்பன் மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பு.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்கள் மற்றும் எம்.ஜி.ஆர்.கழகத்தினருக்கும்  எனது ஆழ்ந்த இரங்கலையும் , அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறேன் என அவரது x-தளத்தில் பதிவிட்டுள்ளார் .

Tags:    

Similar News