முசிறியில் மறைந்த விஜயகாந்த்க்கு அனைத்து கட்சியினர் சார்பில் அஞ்சலி

முசிறியில் மறைந்த தேமுதிக தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்து கட்சியினர் மௌன ஊர்வலம் சென்றனர்.;

Update: 2024-01-07 13:59 GMT

அஞ்சலி செலுத்திய அனைத்து கட்சியினர்

தேமுதிக கட்சி நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அண்மையில் மறைந்தார். இவரது மறைவிற்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் திருச்சி மாவட்டம், முசிறியில் தேமுதிக, திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், அமமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விவசாய சங்கங்கள், வணிகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் முசிறி புதிய பேருந்து நிலையத்திலிருந்து முசிறி கைகாட்டி வரை அமைதி ஊர்வலம் சென்றனர்.

அப்போது ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட விஜயகாந்த் உருவப்படம் எடுத்துச் செல்லப்பட்டது. தேமுதிக மாவட்ட செயலாளர் குமார், திமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் சிவக்குமார், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் ராஜமாணிக்கம், ஜெயம், மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன், காங்கிரஸ் நகரதலைவர் சுரேஷ்,

Advertisement

அமமுக மாவட்ட செயலாளர் ரத்தினவேல், மதிமுக நகர செயலாளர் இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் நல்லுசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், விவசாய சங்கம் யோகநாதன், வர்த்தக சங்கம் ரமேஷ் உள்ளிட்ட பலர் அமைதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து முசிறி கைகாட்டில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவப் படத்திற்கு அனைத்து கட்சியினரும் மலர் தூவி மரியாதை செலுத்தி விஜயகாந்தின் நற்செயல்கள் குறித்து பேசினர். அமைதி ஊர்வலத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முசிறி போலீசார் செய்திருந்தனர்.

Tags:    

Similar News