வணிக வளாகத்தில் அழுகிய சடலம் - அதிர்ச்சியான போலீசார்
திருமணமாகாத முதியவரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை;
Update: 2024-02-15 10:59 GMT
old man dead body
திருச்சியில் பூட்டிய வணிக வளாகத்தில் முதியவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலம் பிருந்தாவனம் குறுக்குத் தெரு பகுதி சேர்ந்தவர் சேதுராமன் (75). முதியவரான இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இவர் திருச்சி மதுரை ரோடு ஜான் பஜார் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு அறையில் தங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக அவரது அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. பின்னர் ஜன்னலை திறந்து பார்த்தபோது அங்கிருந்து துர்நாற்றம் வீசியது. இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சேதுராமன் அழிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.