திருச்சி: வருவாய் துறையினர் தர்ணா..!

திருச்சியில் அரசு அதிகாரிகளைத் தாக்கிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி வருவாய்த்துறையினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-19 13:33 GMT

வருவாய்த்துறை அலுவலர்கள் தர்ணா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்சி காஜாமலை பகுதியில் நேற்று புதன்கிழமை மண்டல துணை வட்டாட்சியர் பிரேம்குமார் கனரா வங்கி ஊழியர்கள் ஜப்தி செய்ய சென்றபோது, அடையாளம் தெரியாத 20க்கும் மேற்பட்ட நபர்கள் சரமாரியாக உருட்டு கட்டைகளால் தாக்கியுள்ளனர், இதனைத் தொடர்ந்து அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஜப்தி செய்ய சென்ற வருவாய் துறை அதிகாரி மற்றும் வங்கி ஊழியர்கள்மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையைச் சேர்ந்த  100க்கும் மேற்பட்டோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.  
Tags:    

Similar News