நிலம் முகவர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா

Update: 2023-10-23 10:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமாரபாளையம் தாலுக்கா நில முகவர்கள் நல முன்னேற்ற சங்கத்தின் பெயர் பலகை திறப்பு விழா புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா ஆயுத பூஜை விழா என முப்பெரும் விழா சார் பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார் செயலாளர் செல்லமுத்து முன்னிலை வகித்தார் பொருளாளர் சிவராமன் அனைவரையும் வரவேற்றார்.

சங்கத்தின் பெயர் பலகையை குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி திறந்து வைத்த வழக்கறிஞர் கருணாநிதி சங்க உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டைகளை வழங்கினார் ஆடிட்டர் சரவணன் புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார் நிகழ்ச்சி பெயர் பலகை திறந்து வைத்து பேசிய காவல் ஆய்வாளர் தவமணி நில முகவர்கள் பெரும்பாலும் 50 வயது கடந்தவர்களாகத்தான் உள்ளீர்கள் இந்த வயதானவர்கள் தங்களின் பெற்றோரை பாதுகாப்பாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் உங்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறிவிடும் தற்போது குமாரபாளையம் பகுதிகளில் விபத்துக்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக தங்கள் அலுவலகங்கள் மற்றும் விற்பனை இயக்கங்களில் கட்டாயம் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் அதை பெரும்பாலும் சாலையை நோக்கித்தல் வேண்டும் இதனால் விபத்துகளில் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி சென்று விட்டாலும் கண்டுபிடிக்க ஏதுவாக இருக்கும்.

கடந்து வார நடைபெற்ற கொலை சம்பவத்தில் கூட நாங்கள் தற்கொலை தான் என்று முடிவு செய்த நிலையில் அருகில் இருந்த தொழிற்சாலையில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு அது கொலை என முடிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை கைது செய்ததாகவும் தெரிவித்தார் அனைத்து பகுதிகளில் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் முக்கிய வர சிசிடிவி காவல் நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார் நிகழ்ச்சி நிறைவில் நன்றியுரை பரமன். பாண்டியன் வழங்கினார் இந்நிகழ்ச்சியை புதிய நிர்வாகிகள் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News