நாமக்கல் டிரினிடி கல்லூரியில் முப்பெரும் விழா!

நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 24-ம் கல்லூரி ஆண்டு விழா, சர்வதேச மகளிர் தின விழா மற்றும் விளையாட்டு விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

Update: 2024-03-09 10:24 GMT
நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 24-ம் கல்லூரி ஆண்டு விழா, சர்வதேச மகளிர் தின விழா மற்றும் விளையாட்டு விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் - காவல்துறை துணை கண்காணிப்பாளர் (ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு) எம். சுபாஷினி கலந்து கொண்டு மாணவிகள் மத்தியில் அவர் பேசுகையில், இந்த கல்லூரி காலகட்டத்தில் மாணவிகள் ஒருமுக சிந்தனையுடன் படிக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நான் பிறந்தேன், விடாமுயற்சியுடன் கல்வி பயின்று இன்று உயர்ந்த பொறுப்பில் உங்கள் மத்தியில் பேசி வருகிறேன், அதேப்போல நீங்கள் நன்றாக படித்து இந்த சமுதாயத்தில் உயர் பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்று இந்த மகளிர் தினத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு அதை நோக்கி செயல்பட வேண்டும் என்று பேசினார். மேலும், சமூக வலைத்தளங்களில் மாணவிகள் கவனமாக இருக்க வேண்டும், அறிவுபூர்வமான விஷயங்களுக்கு மட்டுமே சமூக வலைத்தளங்களை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். நிகழ்வில் டிரினிடி அகாடமி இயக்குநர்கள், முதல்வர், பேராசிரியப்பெருமக்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News