நாமக்கலில் ஓணம் பண்டிகையை குதுகலத்துடன் கொண்டாடிய டிரினிடி மகளிர் கல்லூரி !!!
நாமக்கல் -டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை நேற்று (16/09/24) குதுகலத்துடன் கொண்டாடப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-09-17 06:35 GMT
ஓணம் பண்டிகை
Onam festival
Onam festival
Onam festival
நாமக்கல் -டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை நேற்று (16/09/24) குதுகலத்துடன் கொண்டாடப்பட்டது. நேற்று கல்லூரி வளாகம் முழுவதும் பலூன்களாலும், அத்திப்பூக்களினாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாணவிகள் மற்றும் பேராசிரியப் பெருமக்கள் கேரள பாரம்பரிய உடையான சந்தன கலர் புடவை அணிந்து வந்தனர். இந்த நிகழ்வில் கல்லூரி செயல் இயக்குநர் அருணா செல்வராஜ், முதல்வர் எம் ஆர் லட்சுமிநாராயணன், கல்லூரி வெள்ளிவிழா கொண்டாட்ட குழு ஒருங்கிணைப்பாளர் அரசுபரமேசுவரன், துறைத் தலைவர்கள், பேராசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.