படியில் பயணம் நொடியில் மரணம் - படியில் பயணம் செய்த மாணவன் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினார்
ஆபத்தை உணராமல் தனியார் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சென்ற கல்லூரி மாணவர் கீழே விழும் காட்சி சமூக வலைதளத்தில் வைரல்
Update: 2024-02-19 11:42 GMT
ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து வாலாஜா வழியாக தினந்தோறும் ஏராளமான பள்ளி, கல்லூரி பயிலும் மாணவ மாணவிகள், இளைஞர்கள், வேலைக்கு செல்வோர் என பலர் பயணம் செய்து வருகின்றனர்.. இந்த நிலையில் இன்று பள்ளி கல்லூரி வேலை நாட்கள் என்பதால் பனப்பாக்கத்தில் இருந்து வாலாஜா வழியாக வேலூருக்கு செல்லும் தனியார் பேருந்தில் ஏராளமானோர் பயணம் செய்தனர் இதில் வாலாஜா அருகே உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்களும் பேருந்தில் ஏறினார்கள் ஆனால் பேருந்து உள்ளே செல்ல முடியாத அளவிற்கு கூட்டம் நிரம்பி காணப்பட்டதால் அனைத்து கல்லூரி மாணவர்களும் படியில் தொங்கியபடியும் பேருந்தின் வெளி பகுதியில் உள்ள பின்பக்க ஜன்னல் கம்பிகளில் பிடித்த படியும் பயணம் செய்துள்ளனர்.. இந்த நிலையில். வாலாஜாப்பேட்டை ஹவுசிங் போர்டு பகுதி அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து வந்து கொண்டிருந்த போது படியில் தொங்கியபடி வந்த கல்லூரி மாணவர் ஒருவர் திடீரென எதிர்பாராதவிதமாக ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்து அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களோடு உயிர் தப்பினார். இந்த காட்சி பின்னால் வந்த ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளத்தில் போட்டதால் வைரலாகி வருகிறது. மேலும் இது போன்ற சம்பவங்களை தடுக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் வேலைக்கு செல்வோர் அனைவரது நலனை கருத்தில் கொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்..