தனியார் வங்கியில் தவித்த தேவாங்கால் பரபரப்பு
நத்தத்தில் தனியார் வங்கியில் தவித்த தேவாங்குவால் பரபரப்பு ஏற்பட்டது.;
Update: 2024-05-22 11:00 GMT
நத்தத்தில் தனியார் வங்கியில் தவித்த தேவாங்குவால் பரபரப்பு ஏற்பட்டது.
நத்தத்தில் யூனியன் அலுவலகம் செல்லும் சாலையில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மின் அளவி உள்ள பலகையில் வழி தவறி வந்து தேவாங்கு வந்திருந்தது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் நத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தெரிவித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு வந்த நிலைய அலுவலர் அம்சராஜன் தலைமையிலான வீரர்கள் குழுவினர் மின் இணைப்பு பகுதியில் மின் அளவி பொருத்திய பலகையில் பதுங்கி யிருந்த தேவாங்கை பத்திரமாக உயிருடன் மீட்டு நத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு அவற்றை அவர்கள் வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.