அரசு மருத்துவமனையில் முறைகேடாக குழந்தையை தத்துக் கொடுக்க முயற்சி!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் முறைகேடாக குழந்தையை தத்து கொடுக்க முயற்சி செய்தவர்களை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-05-22 13:52 GMT

திருப்பூர் அரசு மருத்துவமனையில் முறைகேடாக குழந்தையை தத்து கொடுக்க முயற்சி செய்தவர்களை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் முறையீடாக குழந்தையை தத்து கொடுக்க முயற்சி போலீசார் விசாரணை! திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணுக்கு திருமணமாகவில்லை. உறவினர் ஒருவருடன் நெருங்கி பழகியதால் கர்ப்பமானார். அவருக்கு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் குழந்தை பிறந்தது.இந்நிலையில் இளம் பெண்ணிடம் மருத்துவமனையில் துப்புரவு பணி மேற்கொள்ளும் ஒப்பந்த பெண் பணியாளர் அடிக்கடி பேசி வந்துள்ளார்.

Advertisement

அவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மருத்துவ பணியாளர்கள் விசாரித்த போது இளம்பெண் தனது குழந்தையை தத்து கொடுக்க இருப்பது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து தெற்கு போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் இளம் பெண் நிலையை அறிந்த தூய்மைப் பணியாளர் தனது உறவினர் ஒருவருக்கு குழந்தை இல்லை அவருக்கு தத்து கொடுப்பதற்கு குழந்தையை கேட்டுள்ளார். சட்டப்படி தத்து கொடுக்க வேண்டுமே தவிர இவ்வாறு கொடுக்க முடியாது என்று கூறியதுடன் இருவரையும் எச்சரித்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News